சி.சி.எஸ். எனப்படும் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது ‘‘ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் சுயசார்பு பெறும் வகையில் இந்திய விமானப்படைக்காக ரூ. 45 ஆயிரத்து 696 கோடி மதிப்பில் நான்காம் தலைமுறைக்கான 73 தேஜஸ் எம்.கே.1 ஏ ரக இலகு ரக போர்விமானங்கள் மற்றும் 10 தேஜாஸ் எம்.கே.1 ரக போர் விமானங்கள் என 83 நவீன போர் விமானங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர ரூ. 1,202 கோடி மதிப்பில் ராணுவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் என ரூ.48,696 கோடி மதிப்பிலான ராணுவ திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது’’ என்றார்.