பொதுவாகவே அனைவருக்கும் விதவிதமாக சமைத்து சாப்பிடுவது மிகவும் பிடித்த விடயமாக தான் இருக்கும்.அதிலும் அசைவ உணவுகள் என்றால் சொல்லும் போதே நாவூரும்.

அசைவ உணவுகளை பொருத்த வரையில், மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றது.

பார்த்தாலே பசி எடுக்கும் கிராமத்து ஸ்டைலில் விரால் மீன் குழம்பு... எப்படி செய்வது? | Viral Meen Kulambu Recipe

மீன்களை பொரித்து சாப்பிடுவதை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. மீன்குழம்பு என்றாலே கிராமத்து ஸ்டைல் தான் மிகவும் சுவையாக இருக்கும்.

மசாலாவை அரைத்து குழம்பு வைப்பது தான் கிராமத்து ஸ்டைலில் ஸ்பெஷல். அதனால் தான் கிராமத்து மீன் குழம்பு சுவையிலும் மணத்திலும் அல்டிமேட்டாக இருக்கின்றது.

பார்த்தாலே பசி எடுக்கும் கிராமத்து ஸ்டைலில் விரால் மீன் குழம்பு... எப்படி செய்வது? | Viral Meen Kulambu Recipe

அப்படி பார்த்தவுடனே பசி எடுக்கும் வகையில் விரால் மீன் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

விரால் மீன் - 1/2 கிலோ

கிராம் சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 2

துருவிய தேங்காய் - 1/4 கப்

புளி - நெல்லிக்காய் அளவு

பூண்டு - 10பல்

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

மிளகாய்த் தூள் - 1 1/2 தே.கரண்டி

கொத்தமல்லி தூள் - 2 தே.கரண்டி

சீரகம் - 1தே.கரண்டி

வெந்தயம் - 1/2 தே.கரண்டி

வறுத்துப் பொடித்த வெந்தயம் - 1 தே.கரண்டி

நல்லெண்ணெய் - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

பார்த்தாலே பசி எடுக்கும் கிராமத்து ஸ்டைலில் விரால் மீன் குழம்பு... எப்படி செய்வது? | Viral Meen Kulambu Recipe

முதலாவதாக விரால் மீனை நன்றாக சுத்தம் செய்து சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின் ஒரு பாத்திரத்தில் புளியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைத்து கொள்ள வேண்டும்.

புளி நன்றாக ஊறியதும் அதனை கெட்டியாக பதத்தில் கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பார்த்தாலே பசி எடுக்கும் கிராமத்து ஸ்டைலில் விரால் மீன் குழம்பு... எப்படி செய்வது? | Viral Meen Kulambu Recipe

பின்னர் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போன்ற பதத்தில் அரைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் மண் சட்டி ஒன்றை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு வெடிக்க விட வேண்டும்.

பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக மாறும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பார்த்தாலே பசி எடுக்கும் கிராமத்து ஸ்டைலில் விரால் மீன் குழம்பு... எப்படி செய்வது? | Viral Meen Kulambu Recipe

பின்னர் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி வதங்கியவுடன் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

மசாலாவின் பச்சை வாசனை போனதன் பின்னர் புளி கரைசலை சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பார்த்தாலே பசி எடுக்கும் கிராமத்து ஸ்டைலில் விரால் மீன் குழம்பு... எப்படி செய்வது? | Viral Meen Kulambu Recipe

குழம்பு நன்றாக கொதித்த பிறகு கழுவி வைத்துள்ள விரால் மீன் துண்டுகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்டை அதனுடன் சேர்த்து இரண்டு மூன்று  நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவினால் சுவையான விரால் மீன் குழம்பு தயார்.