ஒருவரது முகம் அந்நபரைப் பற்றி பல விஷயங்களை வெளியுலகிற்கு காட்டிக் கொடுக்கும்.
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, ஒருவரது முகத்தில் உள்ள கண்கள், மூக்கு, நெற்றி, தாடை, உதடுகள் போன்றவை அந்நபரின் மறைந்திருக்கும் ஆதிக்க ஆளுமை பண்புகள், பலம், பலவீனம் மற்றும் நடத்தை ஆகியவற்றை தெரியப்படுத்தும்.
இதுவரையில் நாம் விரல்கள், முக வடிவம் போன்றவைகளை வைத்து ஒருவரின் குணங்கள் குறித்து பார்த்திருப்போம். மாறாக ஒருவரின் தாடையின் வடிவத்தையும் வைத்து அவர்களின் குணங்களை கூற முடியும்.
அந்த வகையில், மனிதர்களுக்கு இரண்டு விதமான தாடைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அந்நபரின் சுவாரஸ்யமான ஆளுமை பண்புகள், பலம், பலவீனம் ஆகியவற்றை காட்டிக் கொடுக்கும். அப்படியான தாடைகள் பற்றிய குணங்கள் மற்றும் பலவீனங்களை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
1. இரட்டை தாடை
- உங்கள் தாடைக்கு நடுவே பிளவு இருப்பது போன்ற இருந்தால் நீங்கள் நிறைய ஆபத்துக்களை சந்திக்கும் நபராக இருப்பீர்கள்.
- உறுதியானவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவராகவும் இருப்பீர்கள்.
- புதிய அனுபவத்தை பெற நினைக்கும் நீங்கள் பெரும்பாலும் ஊர் சுற்றுவதில் பிஸியாக இருப்பீர்கள்.
- படைப்பாற்றல் அதிகம் கொண்டவராக இருக்கும் நீங்கள் தலைமைத்துவ பண்புகளை அதிகம் கொண்டிருப்பீர்கள்.
- எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் அதனை பெரிதாக எடுத்து கொள்ளாது, நிலைமையை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள்.
- கோபம் வந்து விட்டால் மற்றவர்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வீர்கள்.
- கலைகளில் நிறைய ஆர்வத்தைக் கொண்டவர்களாக இருக்கும் உங்களிடம் பாடல், ஓவியம், இசை, எழுதல் ஆகியவற்றில் அதிகமான ஆர்வம் இருக்கும்.
2. நேரான தாடை
- நேரான தாடை இருப்பவர்கள் அவர்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருப்பார்கள்.
- எப்போதும் வெளிப்படையாக நடந்து கொள்வார்கள். புதிய நண்பர்களை உருவாக்கும் நபராக இருந்தாலும் மற்றவர்களை கவரும் ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
- மற்றவர்களுக்கு பிடிக்கும் வகையில் எப்போதும் நடந்து கொள்வார்கள்.
- உங்கள் யோசனைகளைத் தெரிவிப்பதிலும் மற்றவர்களை ஊக்குவிப்பதிலும் மிகச் சிறந்தவராக இருப்பார்கள். இந்த குணம் மற்றவர்கள் மத்தியில் நல்ல மனிதராக காட்டும்.