மேல் மாகாணம் மற்றும் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய  பகுதிகளில் 2021 கல்வி ஆண்டுக்கான, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளன.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தரம் 02 தொடக்கம் 13 வரையான வகுப்புகள் நாளை ஆரம்பமாகுமென கல்வி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய, பாடசாலை கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா  கூறியுள்ளார்.