நாட்டில் தற்போது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டவர்கள் தங்களின் பி.சி.ஆர். பரிசோதனைக்கான அறிக்கை கிடைக்கும் வரை வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பது கட்டாயமானது என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரிவுகளுக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும்வரை வீட்டு தனிமைப்படுத்தல் கட்டாயமாகும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்பவர்களின் அறிக்கை வருவதற்கு முன்னர் அவர்கள் சமூகத்தில் நடமாடுவதால் ஆபத்தான சூழ்நிலை உருவாகியுள்ளது என உபுல் ரோ ஹான சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் குறித்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள் 10 ஆயிரம் ரூபாய் அபராத தொகை செலுத்தவேண்டும் என்பதோடு, ஆறு மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.