இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் குறைந்து வரும் நிலையில், கேரளாவில் குறைந்தபாடில்லை.

இன்று அம்மாநிலத்தில் 5,615 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 24 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,17,311 ஆக உள்ள நிலையில், 3184 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை 63,802 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். அவர்கள் சிகிச்சை பெற்றும், தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.