கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையிலான மாற்று மருந்தினை இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது
இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 6 ஆயிரம் பேரில் முதல் 2 ஆயிரம் பேருக்கு குறித்த மாற்று மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .
குறித்த பரிசோதனையில் உயிரிழப்பு வெகுவாக குறைவடைந்துள்ளதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.
இதேவேளை பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்ட dexamethasone எனப்படும் steroids மருந்தானது சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளிடம் இருப்பதாகவும் , குறித்த மருந்துக்கான செலவு மிகவும் குறைவு எனவும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
இதேவேளை ஆத்ரைடிஸ், ஆஸ்துமா மற்றும் சில தோல் தொடர்பான நோய்களுக்காக குறித்த மருந்து ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது