பொதுவாக பெண்கள் அழகு மற்றும் தலைமுடி விடயத்தில் அதிகமாக கவனம் எடுத்து கொள்வார்கள்.
இது தற்போது மட்டுமல்ல ஆரம்ப காலம் முதல் பெண்கள் அழகுப்படுத்தும் விடயங்களில் அதிக கவனம் எடுத்து செலுத்துவார்கள். அதிலும் பெண்களுக்கு இடுப்பிற்கு கீழ் தலைமுடி தொங்க வேண்டும் என்பார்கள். இது தான் அழகு என எமது முன்னோர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் இது எல்லா பெண்களுக்கு அது சாத்தியமான விடயமாக இருக்காது. ஏனெனின் குறிப்பிட்ட சில பெண்களுக்கு முடி அதிகமாக வளர்க்க பிடிக்கும். ஒரு சில பெண்களுக்கு முடி இருப்பதே பிடிக்காது. இருந்த போதிலும் அநேகமான பெண்களுக்கு தலைமுடி நீளமாக வளர்ப்பதே பிடிக்கும்.
இவர்களின் ஆசை நிறைவேற வேண்டும் என்றால் தலைமுடியை சரியாக பராமரிக்க வேண்டும். நீண்ட கூந்தல் பெற வேண்டும் என ஆசை இருக்கும் பெண்கள் பயனுள்ள வகையில் சில மூலிகை பொருட்களை கொண்டு எண்ணெய் செய்து பயன்படுத்தலாம்.
அப்படியாயின் அடர்த்தியான கூந்தலை மாத அளவில் பெறுவதற்கு என்னென்ன மூலிகைகளை போட்டு எண்ணெய் செய்யலாம்் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- செம்பருத்தி பூ
- செம்பருத்தி இலை
- குப்பை மேனி
- மருகு
- மயில் மாணிக்கம்
- கருவேப்பிலை
- வேப்பிலை
- மருதாணி
- கற்றாலை
- கீழா நெல்லி
செய்முறை
முதலில், தேவையான பொருட்கள் அனைத்தையும் தேவையான அளவு எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
பின்னர் அதனை ஒரு சுத்தமான மிக்ஸியில் போட்டு அரைக்கவும். மிக்ஸி இல்லாதவர்கள் அம்மி கூட பயன்படுத்தலாம்.
இதனை சிறிது சிறிதாக அடை போன்று உருட்டி நன்கு உலரும் வரை நிழலில் வைத்து காய வைக்க வேண்டும்.
கலவை நன்கு உலர்ந்ததும் எடுத்து ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
காய வைத்து சேமித்து வைத்திருக்கும் உருண்டைகளை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி தலைக்கு வைக்கலாம்.
இப்படி வாரத்திற்கு இரண்டு தடவைகள் தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.