இளையதலைமுறை நடிகர் ஒருவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மனிதக்குரங்கு பெயர் கொண்ட படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த தயாரிப்பாளரை கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஒருவர் தனது அடுத்த படம் குறித்து பேசுவதற்காக சந்தித்ததாகவும், அதன் காரணமாக தனக்கும் கொரொனா இருக்கின்றதா? என்பதை அறிய கொரோனா பரிசோதனை செய்து சோதனையின் முடிவுக்கு காத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரையில் அந்த இயக்குனர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோலிவுட் திரையுலகில் பெரும் பர்பாரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் அந்த தயாரிப்பாளரை சமீபத்தில் யார் யாரெல்லாம் சந்தித்தார்கள் என்பது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும், தமிழ் திரையுலகை சேர்ந்த இன்னும் சிலரும் பரிசோதனை வளையத்தில் வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது