தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த நடிகை சஞ்சனா அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது தெரிந்ததே. குறிப்பாக இந்த கொரோனா விடுமுறையில் அவரது கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூபீஸ் பிகினி உடையில் ஒரு போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் தத்துவ மழை பொழிந்து இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
’தினமும் நீங்கள் ஒரு சிறந்த நபராக இருப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்போது அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி வாழ்க்கையை இனிமையாக அனுபவியுங்கள் என்றும் கிடைத்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி தவறு செய்யாமல், தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்க கற்றுக் கொள்ளுங்கள் என்றும் அன்பு மற்றும் நேசிக்கப்படுவதற்கான வாய்ப்பை கடவுள் உங்களுக்கு கொடுக்கும் போது அந்த வாய்ப்பை இழக்காதீர்கள்’ என்றும் கூறியுள்ளார்.
மிகப்பெரிய தத்துவ மழை பொழிந்து உள்ள நடிகை சஞ்சனாசிங்கிற்கு வாழ்த்து கூறியுள்ள ரசிகர்கள், ஆனால் அதற்கு நேர்மாறாக பிகினி உடையில் போஸ் கொடுத்திருப்பதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.