லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 55). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த துரைராஜ், நேற்று முன்தினம் வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
