அவிசாவளையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அவிசாவளை, மாடொல பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்பு சேகரிக்கும் நிலையம் ஒன்றில் நபரொருவர் எரிவாயு சிலிண்டர் ஒன்றை வெட்ட முற்பட்ட போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.