க.பொ.த சாதாரணதர மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை நடத்துகின்ற காலத்தினை மாற்றுவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி, சாதாரணதரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலும், உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கான புதிய யோசனையொன்றை அமைச்சரவை அனுமதிக்காக அடுத்தவாரம் சமர்ப்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் இந்த யோசனையை முன்வைப்பதாகவும், இதன் மூலம் மாணவர்களின் கல்விக்கு மேலதிகமாக செலவாகும் ஒன்பது மாத காலத்தினை மிச்சப்படுத்த முடியும் என்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக பொது மக்களின் ஆலோசனையைப் பெற வேண்டியுள்ளதனால், பெரும்பாலும் இந்த யோசனையை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்த முடியும் என்பதாக பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.