தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரேநாளில் 1982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களுக்கு மேலாக அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு உச்சக்கட்டமாக 1982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8 பேர் தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்கள் ஆவார்கள். மொத்தம் 367 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 1342 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை 22,047 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று 18,231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 6,73,906 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இன்று 16,889 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 6,42,201 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.