கொழும்பு, மருதானை, கொம்பனித்தெரு சுற்றியுள்ள பிரதேசங்களில் இன்று (11) இரவு 06 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதனபடி, இன்று இரவு 10 மணி முதல் நாளை (11) அதிகாலை 4.00 மணி வரை நீர் வெட்டு இவ்வாறு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, டீன்ஸ் வீதி, டாலி வீதி உள்ளிட்ட அனைத்து குறுக்கு விதிகள், சொக்ஷோல் வீதி, சொக்ஷோல் லேன், இப்பன்வல சந்தி தொடக்கம் கொம்பனித்தெரு வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதேபோல், யூனியன் பிளேஸில் கலாநிதி கொல்விட் ஆர். டி சில்வா மாவத்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து கிளை வீதிகளுக்கும் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு – நீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை மேம்பாட்டு முதலீட்டு திட்டத்தின் கீழ், விநியோகக் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய மேம்படுத்தல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.