உலகளாவிய ரதீயில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மலையகப்பகுதியிலும் இன்று இந்நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை குறைக்க வேண்டும் என்றால் மக்கள் சுகாதார பிரிவினர் கூறும் அறிவுறுத்தல்களை பின் பற்றி முழுமையாக தனிமைப்படுத்தும் சட்டங்களை கடைபிடிக்க வேண்டும. அரசாங்த்தினால் பெற்றுக்கொடுக்க நிவாரணங்கள் அக்கரபத்தனை பிரதேசசபை ஊடாக ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆகவே மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வீட்டை வெளியே வராது பாதுகாப்பாக வீட்டிலிருந்து ஒத்துழைக்க வேண்டும் என அக்கரபத்தனை பிரதேசசபையின் தலைவர் சுப்பிரமணியம் கதிர்ச்செல்வன் தெரிவிரித்தார்.
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை தோன்பீல்ட் தோட்டத்தில் ஒருவருக்கும் மற்றும் லிந்துல சுகாதார பரிவுக்குட்பட்ட பகுதியில் மேலும் எட்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி நேற்று (09) திகதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தோன்பீல்ட் தோட்டத்தில் 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாகவும் அரச நிவாரணங்கள் பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் நேற்று (09) இரவு அக்கரபத்தனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் பேர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் . அக்கரபத்தனை பிரதேச சபை கொரோனா தொற்றினை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசங்களை தொற்று நீக்கம் செய்துள்ளது. விளிப்புணர்வுகளை செய்துள்ளது. கடந்த காலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் அனைவருக்கும் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஊடாக நிவாரணங்களை பெற்றுக்கொடுத்துள்ளது. இரண்டாம் அலையின் போது மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். உங்களுக்கு தெரியும் இன்று இரண்டாவது கொரோனா அலை கொழும்பில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் அங்கு மக்கள் அதிகமான வாழ்வதும் குடும்பங்கள் வீடுகள் நெருக்கமாக இருப்பது தான். அந்த நிலை தான் மலையகத்திலும் உள்ளன. இவ்வாறான ஒரு நிலை மலையகத்திலும் ஏற்பட்டால் தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார வசதிகள் செய்து கொடுப்பதில் சிக்கல் நிலை தோன்றி விடும்.
ஆகவே உங்கள் குடும்பங்களினதும் சமூகத்தின் பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு மக்கள் பாதுகாப்பாக வீடுகளில் இருக்க வேண்டும். கொரோனா தொற்று ஏற்படாத குடுபங்களில் உள்ளவர்கள் கூட தேவையற்ற பயணங்களை தவிர்த்து அத்தியாவசிய தேவைக்காக மற்றும் வீட்டை விட்டு ஒருவர் மாத்திரம் செல்ல வேண்டும். ஆகவே அடுத்த பகுதிகளுக்கு வராது தடுப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. ஆகவே சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி இதற்கு ஒத்துழைப்பு வழங்குவீர்களானால் இதனை மிக விரையாக எமது பிரதேசத்திலிருந்து தொற்றுவதை தடுக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தோன்பீல்ட் தோட்டத்தில் வெளியாட்கள் உள் செல்வதற்கும் உள்ளிருப்பவர்கள் வெளியேறுவதற்கும் சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து பயணத்தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.