வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.
புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
கடல் நிலை: புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
- Master Admin
- 11 December 2020
- (345)

தொடர்புடைய செய்திகள்
- 14 March 2025
- (164)
மீன ராசியில் உதயமாகும் புதன்: தொட்டதெல்ல...
- 16 May 2021
- (616)
கொழும்பு நகர எல்லை தொற்றாளர்கள் குறித்து...
- 30 March 2024
- (281)
செவ்வாழை ஆண்மை குறைபாட்டை போக்குமா.. இத்...
யாழ் ஓசை செய்திகள்
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
- 14 March 2025
தொடர் மாற்றத்துக்குள்ளாகும் தங்க விலை
- 14 March 2025
இரவு நேர சேவையில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்
- 14 March 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.