கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருவதால், சென்னையில் ஊரடங்கை கடுமையாக்கும் திட்டம் ஏதும் உள்ளதா? என விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட 5ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. அங்காடிகள், பெரிய அளவிலான கடைகளும் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,  நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வு கொரோனா அதிகரித்து வருவதால், சென்னையில் ஊரடங்கை கடுமையாக்கும் திட்டம் ஏதும் உள்ளதா? என கேள்வியெழுப்பியுள்ளனர்.

மேலும் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டுவரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என்றும் இது தொடர்பாக தமிழக அரசு நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மக்கள் நலனை கருத்திற்கொண்டு கேள்வி எழுப்புவதாக தெரிவித்தனர்.