ஜோத்பூர்: குடும்ப தகராறில் மனைவியை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற கணவன், போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு மொபைல் போனில் வீடியோ கேம்ஸ் விளையாடிய கணவனை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை அடுத்த பிஜேஎஸ் காலனியை சேர்ந்தவர் விக்ரம் சிங் (35). இவரது மனைவி சிவ் கன்வார் (30). நேற்று முன்தினம் இரவு தம்பதியர் இருவருக்கும் குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. அதனால் ஆவேசமடைந்த விக்ரம் சிங், தனது மனைவி சின் கன்வாரை கத்திரிக் கோலால் குத்திக் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை, அதே அறையில் பூட்டிவிட்டு இந்த சம்பவம் குறித்து போலீசுக்கும், தனது மாமியாருக்கும் போனில் தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்த்த போது, விக்ரம் சிங் தனது மொபைல் போனில் வீடியோ கேம்ஸ் விளையாடிக் ெகாண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் ரத்த ெவள்ளத்தில் கிடந்த சிவ் கன்வாரின் சடலத்தை கைப்பற்றி மகாமந்திர் கைலாஷாதன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விக்ரம் சிங்கை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட விக்ரம் சிங், வேலையில்லாமல் இருந்ததால் தம்பதியருக்குள் அடிக்கடி குடும்ப சண்டைகள் ஏற்பட்டது.

அவரது மனைவி வீட்டில் தையல் தொழில் செய்து வந்தார். சம்பவம் நடந்த நாளில், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மனைவின் கத்தரிக்கோலை எடுத்து அவரை விக்ரம் சிங் பலமுறை குத்திக் கொலை செய்துள்ளார். நாங்கள் அவரது வீட்டிற்கு வந்து பார்த்த போது, குற்றம் சாட்டப்பட்ட அவர் எந்த வருத்தமும் இல்லாமல் தனது மொபைல் போனில் வீடியோ கேம்ஸ் விளையாடிக் ெகாண்டிருந்தார். தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், அவர்கள் கொலை சம்பவம் நடந்த போது வீட்டில் இல்லை’ என்றனர்.