நல்லூர் ஆலய சூழலில் கலாசாரத்தை பேணும் வகையிலேயே கழிவு ஒயில் ஊற்றப்பட்டது என்று ஆலய நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அது விசமிகள் செயல் என வெளியாகிய செய்தியை மறுக்கும் நல்லூர் கந்த சுவாமி ஆலய தரப்பு, இளையோர் இணை தேர் முட்டிப்பகுதியில் வந்து அமர்வதைத் தடுக்கும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டது என விளக்கமளித்துள்ளது. 

நல்லூர் ஆலய சூழலில் கலாசாரத்தை பேணும் வகையில் இளையோர் இணை அமர்வதைத் தடுக்க பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் தடுக்க முடியாத நிலையில் கழிவு ஒயில் ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.