பிக் பாஸ் புகழ் லொஸ்லியா இலங்கையில் உள்ள அவரின் வீட்டில் சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அதன் பின் குடும்பத்தினருடன் இணையவுள்ளதாகவும் அவரின் நண்பர் வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கனடாவில் மாரடைப்பு காரணமாக அண்மையில் உயிரிழந்த அவரது தந்தையின் உடல் திருகோணமலையிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் வேளையில், வெளிநாட்டில் மரணம் அடைந்த லொஸ்லியாவின் தந்தையின் உடல் அவர்களின் தாயகத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
இதையொட்டி சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளின்படி மரியநேசனின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடத்த லொஸ்லியாவின் குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.