த்ரில்லர் தொடங்கி காமெடி வரை இந்த வாரம் ஓ,டி.டி தளங்களில் வெளியாகும் சில படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வார இறுதி வந்துவிட்டதால், ஓ.டி.டி தளங்களில் என்ன படம் பார்க்கலாம், எந்த புதிய படம் வெளியாகியுள்ளது என்று பலரும் இப்போது தேட தொடங்கியிருப்பார்கள். அவர்களுக்காக இந்த வாரம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் சில படங்கள் குறித்து பார்ப்போம். 

சிக்மா (Sigma): நெட்ஃபிலிக்ஸ் (அக்டோபர் 30) 

தமிழ்நாடு முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சைய் இயக்குனராக அறிமுகமான முதல் படம் சிக்மா. சுந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில்,. ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் மற்றும் சிவ பண்டிட் ஆகியோர் நடித்துள்ளனர்; தமன் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் அக்டோபர் 30-ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் இந்த படம் வெளியாகிறது.

அக்கா (Akka): நெட்ஃபிலிக்ஸ் (அக்டோபர் 30) 

1980-களில் 'பேர்னூரு' என்ற கற்பனைக் கிராமத்தில் நடைபெறும் இந்தக் குற்றப் பின்னணி கொண்ட, பெண்களால் நடத்தப்படும் தங்கம் கடத்தல் கும்பலை மையம் கொண்டது. இந்த அமைப்பின் வலிமையான தலைவியாக பவானி கேரக்டரில் கீர்த்தி சுரேஷும், அவரை வீழ்த்தத் துடிக்கும் கிளர்ச்சியாளரான ருத்ரா கேரக்டரில் ராதிகா அப்தேவும் நடித்துள்ளனர். இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் அக்டோபர் 30-ந் தேதி வெளியாக உள்ளது.

இம்மார்ட்டல் (Immortal): சோனிலிவ் (அக்டோபர் 30) 

மகி எனும் அச்சுக்கூட தொழிலாளி, தனக்குக் குறைந்த வாடகையில் வீடு கிடைக்காதா என்று ஏங்கும்போது, சிந்து என்ற மர்மமான பெண் ஒரு ஆடம்பரமான குடியிருப்பில் மிகவும் குறைந்த வாடகைக்கு அவனுக்கு ஒரு அறையை வழங்குகிறாள். அவளுடனான நெருக்கம் பல திடுக்கிடும் சம்பவங்களுக்கும், அவளால் நீண்ட காலம் மறைக்க முடியாத ஒரு மாயாஜால ரகசியம் என்ன என்பது தான் இந்த படத்தின் கதை. ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் காயடு லோஹர் நடித்துள்ள இந்த படம் சோனி லிவ் தளத்தில் அக்டோபர் 30-+ந் தேதி வெளியாக உள்ளது.

ருத்ரவனம் பி.எஸ் (Rudravanam PS): ஜீ5 (அக்டோபர் 30) 

ஒரு தீவிரமான இன்விஸ்டியேஷன் த்ரில்லர் சீரிஸ் தான் ருத்ரவனம் பி.எஸ். நரேஷ் அகஸ்தியா, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமாராக நடித்துப் கிராமத்துத் தங்கம் கொள்ளை வழக்கை விசாரிக்கிறார். அப்போது மாயமான ஒருவரைத் தேடும் போது, காட்டில் தலையில்லாத உடல் ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. உள்ளூர் அரசியல் விளையாட்டுகளும், புதைக்கப்பட்ட ரகசியங்களும் ஒவ்வொரு தடயத்தையும் குழப்ப, உண்மையைக் கண்டறிய அவர் போராடுகிறார். இந்த தொடர் ஜீ5 தளத்தில் அக்டோபர் 30-ந் தேதி வெளியாக உள்ளது.

லவ் ஆல்வேஸ் (Love Always): ஜியோஹாட்ஸ்டார் (அக்டோபர் 30) 

பிரியும் தருவாயில் இருக்கும் ஒரு ஜோடி, திடீரென்று தங்களின் பழைய உருவங்களை நேருக்கு நேர் சந்தித்தால் எப்படி இருக்கும்? 'ஹியர் வி கோ அகெய்ன்' (Here We Go Again) என்ற கொரியன் வெப் தொடரை தழுவி எடுக்கப்பட்ட இந்தத் தமிழ் ரொமான்டிக் ஃபேண்டஸி தொடரில் கௌரி ஜி. கிஷன், ரம்ஸான் முகமது, ஜெயபிரகாஷ், ஜெயசுதா மற்றும் மாயா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் அக்டோபர் 30-ந் தேதி வெளியாகிறது.

அவராச்சன் & சன்ஸ் (Avaraachan & Sons): நெட்ஃபிலிக்ஸ் (அக்டோபர் 30) 

ஒரு ஜாலியான உணர்வுடன் நிறைவுபெறும் இந்த மலையாள காமெடி-டிராமா திரைப்படம் பொறுப்பற்ற அப்பாவால் மகன்கள் ஜெய்சன் மற்றும் ஜெய்பன் அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அப்படி ஒரு சர்ச்சையில் சிக்கிய அவர் இதில் இருந்து தப்பிக்க, வட கேரளாவில் உள்ள அவரது மூத்த சகோதரி எலியம்மாவின் வீட்டிற்கு செல்கிறார். அதன்பிறகு என்ன நடந்தது என்பது தான் கதை. பிஜு மேனன், ஸ்ரீநாத் பாசி, கணபதி, கிரேஸ் ஆண்டனி, அகிலா பார்கவன் மற்றும் வினய் ஃபார்ட் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் அக்டோபர் 30-ந் தேதி வெளியாக உள்ளது.