2019 ஜூன் 19ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக 14 துறைகளில் விசேட ஆற்றல்களைக் கொண்ட இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அணைவாக தற்பொழுது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு பெரும் எண்ணிக்கையிலான இளைஞர், யுவதிகள் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்து பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசேட ஆற்றல்களைக் கொண்டு தொழில் வாய்ப்புக்காக ஜப்பான் மொழி தேர்ச்சிப் பரீட்சையில் சித்தி எய்திருப்பது கட்டாயமாகும்.

மொழி பரீட்சைக்கு மேலதிகமாக 14 விசேட துறைகளில் கொண்டுள்ள ஆற்றல் மற்றும் அனுபவத்தை கவனத்திற் கொள்ளப்படுவதுடன், தொழில் வாய்ப்புகளுக்காக 18 தொடக்கம் 48 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகள் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும்.

இரு நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக தொழில் வாய்ப்பை மேம்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தும் எதிர்பார்ப்புடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் சந்தை பல் வகைப்படுத்தல் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன வழங்கிய வழிகாட்டலின் கீழ் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு நடத்தப்படவுள்ள மொழி மற்றும் ஆற்றல் தொடர்பான பரிசோதனையை இந்த நாட்டில் நடத்தும் நோக்கத்துடன் இணையத்தள தொழில்நுட்பத்தின் ஊடாக விசேட முத்தரப்பு கலந்துரையாடல் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் ஜப்பான் நீதி அமைச்சின் உதவி பிரதி அமைச்சர் தலைமையிலான 18 பேரை கொண்ட ஜப்பான் பிரதிநிதிகளும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தவின் தலைமையிலான பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் 7 பேரும், ஜப்பான் இலங்கை தூதுவர் மற்றும் அதன் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் விசேட ஆற்றல்களைக் கொண்ட ஊழியர்களை ஜப்பான் நாட்டுக்கு அழைப்பதற்கான நடைமுறை மற்றும் எதிர்காலத்தில் இலங்கையில் நடத்தப்படவுள்ள ஜப்பான் மொழி மற்றும் ஆற்றல் பரிசோதனைக்கு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் உள்ள ஜப்பான் மொழி கற்பதற்கான விரிவான வசதிகள் காரணமாக ஜப்பான் மொழி மற்றும் விசேட ஆற்றல்களைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் பலர் நாட்டில் இருப்பதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டினர்.

அத்தோடு நடைபெறவுள்ள மொழி மற்றும் ஆற்றல் குறித்த பரிசோதனைக்காக தேவையான பெருகையை பெற்றுக்கொள்ளக்கூடிய கணினி இணையதள வசதிகளினூடான கணினி மத்திய நிலையம் நாட்டில் இருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

உத்தேச விடயங்கள் தொடர்பில் ஜப்பான் பிரதிநிதிகள் குழு தெளிவைபெற்றதினால் அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைவதாக பிரதான ஜப்பான் பிரதிநிதி குறிப்பிட்டார்.

இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் அந்நாட்டுக்கான அரச நிறுவனம் அது தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கும் இலங்கையில் மொழி மற்றும் ஆற்றல் பரிசோதனைகளை துரிதமாக மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள தொழில் வாய்ப்புக்கள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நாட்டின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் சந்தை பல் வகைப்படுத்தல் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் கூடுதலான ஆர்வத்துடன் இருப்பதாகவும் இந்த பேச்சுவார்த்தையின் இறுதியாக பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த ஜப்பான் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.