தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் பல பிரபலங்களும் கொரோனா வைரஸ்க்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் தற்போது பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் அவரது மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் தமிழ் திரையுலகில் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது
சென்னை வடபழனியில் வசித்து வரும் இந்த தம்பதிகள், கடந்த சில நாட்களாக மேடை கச்சேரி கலைஞர்களுக்கு நிதி திரட்டுவதற்காக பேஸ்புக் மூலம் இசை கச்சேரி நடத்தி வந்துள்ளார்கள். இந்த நிலையில் சமீபத்தில் பாடகருக்கும் அவருடைய மனைவிக்கும் கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதோடு அவர்களுடன் தொடர்பில் இருந்த பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்களையும் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் அவரது மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் கோலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது