பொதுவாகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் பிடித்தமான பொருள் ஒன்று இருக்க முடியுமா என்றால் அது நிச்சயம் ‘டெடி பியர்’ (teddy bear) தான்.

குண்டு கண்கள், பெரிய மூக்கு, நீளமான காதுகள் என பஞ்சினால் செய்யப்பட்டிருக்கும் ஓர் அழகான கரடிப் பொம்மையே ‘டெடி பியர். குழந்தைகளை மட்டுமல்லாது குமரிப் பெண்களையும்கூடக் கவர்ந்திழுத்துவிடும் சக்தி டெடி பியருக்கு உண்டு.

அட இது தெரியாம போச்சே..! Teddy Bear பிரபல்யமாக இது தான் காரணமா? | The Story Of Teddy Bearஇப்படிப்பட்ட ‘டெடி பியரை’ உங்களுக்குப் பிடிக்குமேயானால் நீங்கள் கண்டிப்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபரான தியோடர் ரூஸ்வெல்ட் பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

‘டெடி பியர்’ உருவாகுவதற்குக் காரணமே தியோடர் ரூஸ்வெல்ட்தான். அமெரிக்காவின் 26-வது ஜனாதிபதியும் அமைதிக்கான நோபல் பரிசும் வென்றவரான தியோடர் ரூஸ்வெல்ட் எவ்வாறு ‘டெடி பியர்’ உருவாக காரணமாக இருந்தார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அட இது தெரியாம போச்சே..! Teddy Bear பிரபல்யமாக இது தான் காரணமா? | The Story Of Teddy Bearதியோடர் ரூஸ்வெல்ட், வேட்டையாடுவதில் அலாதி பிரியம்கொண்டவர். 1902-ம் ஆண்டு நவம்பர் மாதம்.அது, அவர் ஜனாபதிபதியாகப் பதவி வகித்த காலகட்டம்.

மிஸிசிப்பி மாகாண கவர்னர், ‘‘வேட்டையாடச் செல்லலாம்’’ என ரூஸ்வெல்ட்டை வற்புறுத்த. அவரும் சம்மதித்தார்.

அந்த நாட்களில்.அமெரிக்காவில் கரடியை வேட்டையாடினால், சிறந்த வேட்டைக்காரனாக அனைவாரலும் புகழப்படுவார்கள்.

அட இது தெரியாம போச்சே..! Teddy Bear பிரபல்யமாக இது தான் காரணமா? | The Story Of Teddy Bear

மிஸிசிப்பி கவர்னர் மற்றும் ஒரு வேட்டைக்காரக் கும்பலுடன்.ரூஸ்வெல்ட், வேட்டையாடக் காட்டுக்குப் புறப்பட்டார்.

காட்டில், தன்னுடன் வந்தவர்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வேட்டையாட அனுப்பப்பட்டனர். வேட்டையின் தீவிரம் மூன்று நாட்களைக் கடந்தது. ஆனாலும், ஒரு கரடியும் கண்ணில் சிக்கவில்லை.

இதனால் ரூஸ்வெல்ட் சோர்வடைந்தார். அவர், ஏமாற்றம் அடைந்துவிடக் கூடாது என்று கருதிய வேட்டைக்காரக் கும்பல். எங்கிருந்தோ ஒரு வயதான கரடியைப் பிடித்துவந்து.

அட இது தெரியாம போச்சே..! Teddy Bear பிரபல்யமாக இது தான் காரணமா? | The Story Of Teddy Bear

மரத்தில் கட்டிப்போட்டு, ‘‘இந்தச் கரடியைச் சுடுங்கள்’’ என்றனர். அதை உற்றுப் பார்த்த ரூஸ்வெல்ட், ‘‘நீங்கள் பிடித்துவந்த கரடியை.நான் சுட்டால் எனக்குக் கெட்டப்பெயர்தான் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் பாவம் அந்தக் கரடி.

அதற்கு வயதாகிவிட்டது. இருக்கும் கொஞ்ச நாட்களையாவது அது சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும். கரடியை விடுவியுங்கள்’’ என்றார். அடுத்த நாளே, ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் இந்தச் சம்பவம் ஒரு கார்ட்டூனாக வெளிவந்தது.

அட இது தெரியாம போச்சே..! Teddy Bear பிரபல்யமாக இது தான் காரணமா? | The Story Of Teddy Bear

அதில், ஒருவர் கரடியைக் கயிற்றால் கட்டிப் பிடித்திருப்பது போலவும் அதைச் சுடாமல் ரூஸ்வெல்ட் திரும்பிச் செல்வது போலவும் அந்த கார்ட்டூன் வரையப்பட்டிருந்தது. இது, காட்டுத்தீபோல் மக்களிடத்தில் பரவியது.

இந்தச் சம்பவத்தை மனதில்கொண்டு மோரிஸ் மைக்டாம் எனும் பொம்மை செய்து விற்கும் வியாபாரி, பஞ்சால் செய்யப்பட்ட ஓர் அழகான கரடிப் பொம்மையைச் செய்தார்.

அட இது தெரியாம போச்சே..! Teddy Bear பிரபல்யமாக இது தான் காரணமா? | The Story Of Teddy Bearஅந்த ஒரு பொம்மையை விலை கொடுத்து வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த ஒரு பொம்மையை வாங்கவே இவ்வளவு கூட்டம் சேருகிறது என்றால் தியோடர் ரூஸ்வெல்ட் பெயரில் கரடிப் பொம்மை செய்து விற்றால், தனக்கு நல்ல லாபம் வரும் என்று எண்ணிய மோரிஸ் மைக்டாம், ரூஸ்வெல்ட்க்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில், ‘‘நான்... ஒரு கரடிப் பொம்மை செய்யலாம் என்று எண்ணம் கொண்டிருக்கிறேன். அதில், உங்களுடைய சம்பவத்தைக் குறிக்கும்வகையில் உங்கள் பெயரையும், கரடியின் பெயரையும் இணைத்து ஒரு பெயர்வைக்க உள்ளேன்.

அட இது தெரியாம போச்சே..! Teddy Bear பிரபல்யமாக இது தான் காரணமா? | The Story Of Teddy Bear

 

அதற்கு, நீங்கள் அனுமதியளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். ‘‘அப்படியானால், என் புனைப்பெயரான ‘டெடி’ என்ற பெயரை இணைத்து, உங்கள் கரடிப் பொம்மைக்கு பெயர் வைத்துக்கொள்ளுங்கள்’’ என சம்மதம் தெரிவித்தார்.

மோரிஸ் மைக்டாமும், தன்னுடைய கரடிப் பொம்மைக்கு ரூஸ்வெல்ட் சொன்ன புனைப்பெயரை இணைத்து, ‘டெடி பியர்’ என்று பெயர்வைத்தார். அன்று பிறந்த இந்த டெடி பியர்தான், இன்றும் குழந்தைகளின் கனவு உலகமாக இருக்கிறது.