பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள ’பெங்குயின்’ திரைப்படம் குறித்த ஒரு கேள்வியை சமூக வலைதளத்தின் மூலம் கேட்டபோது அந்த கேள்விக்கு சரியான விடை தெரியாமல் ரசிகர்கள் முழித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படம் ’பெங்குயின்’ வரும் 19ம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் டீஸர் நாளை வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்த புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்த போஸ்டரில் அனைவரும் கீர்த்தி சுரேஷின் முகத்தை மட்டுமே கவனித்துள்ள நிலையில், கார்த்திக் சுப்புராஜ் கீர்த்தி சுரேஷின் உருவத்திற்கு கீழே குடையைப் பிடித்துக் கொண்டு இருப்பவர் யார்? என்ற கேள்வியை தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுள்ளார்.

இந்த கேள்விக்கு ஒரு சிலர் ரஜினிகாந்த் என்றும் ஒரு சிலர் தனுஷ் என்றும் பதிலளித்தாலும், உண்மையிலேயே குடையை பிடித்துள்ளவர் யார் என்பது தெரியாமல் பலர் முழித்து வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் கேட்ட இந்த கேள்விக்கான பதில் நாளை வெளிவர இருக்கும் டீசரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.