நெய்யை யாரெல்லாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்திய பாரம்பரிய உணவுகளின் இடத்தில் நெய்க்கு மிக முக்கிய இடமுண்டு. நெய்யை உணவில் எடுத்துக் கொள்வதால் நன்மைகள் அதிகம் கிடைக்கின்றது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கு ஆரோக்கியம் அளிக்கும் நெய், ஒரு சிலருக்கு உடல்நல பிரச்சனையும் ஏற்படுகின்றது.
சாப்பாட்டில் நெய் சேர்த்தால் கட்டாயமாக உப்புச் சேர்க்க வேண்டும். உப்பில்லாமல் சாப்பிடக்கூடாதாம்.
சூடாக சமைத்த உணவில் மட்டுமே நெய் சேர்க்க வேண்டும். சூடாக இல்லாத உணவுகளில் நெய்யைக் கலந்து சாப்பிடுவது கூடாது.
செரிமானப் பிரச்சனை, அஜீரணக் கோளாறு இவ்வாறான பிரச்சனை உள்ளவர்கள் நெய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
IBS (Irritable Bowel Syndrome) மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் நெய் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
பருவகாலங்கள் மாறும் போது ஏற்படும் தொற்றுக்கள் ஏற்படும் என்றால் அவர்கள் நெய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதே போன்று கர்ப்பிணிகள் நெய் சாப்பிடும் போது இரட்டிப்பு கவனம் தேவை. குறிப்பாக அதிக உடல்எடை உடையவர்கள் நெய் சாப்பிடுவதைக் குறைக்கவும்.
கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய் உள்ளவர்களும் உணவில் நெய் சேர்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.