தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 72 நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக இடைவௌியை பேணாமை மற்றும் முகக்கவசம் அணியாமை ஆகிய காரணங்களுகாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.