மஸ்கெலியாவில் மேலும் எட்டு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணபட்டுள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி சந்ரதாசன் தெரிவித்தார்.

குறித்த எட்டு பேருக்கும் இன்று (23) கொரோனா உறுதி செய்யபட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்

மஸ்கெலியா காட்மோர் கல்கந்த தோட்டபகுதியில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு தொற்றாளர்களும், ஸ்டஸ்பி தோட்ட பகுதியில் இரண்டு ஆண் தொற்றாளர்களும், புரன்ஸ்வீக் தோட்ட பகுதியில் ஒரு தொற்றாளரும் மற்றும் பனியன் தோட்ட பகுதியில் ஒரு தொற்றாளர் உட்பட மொத்தம் எட்டு பேர் இனங்காணபட்டுள்ளனர்.

கடந்த 21ம் திகதி கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் கட்டிட நிர்மாண பணியில் ஈடுபட்டு வந்த தந்தையும் மகனும் கடந்த 16ம் திகதி குறித்த தோட்ட பகுதிக்கு வருகை தந்திருந்த வேலை குறித்த தந்தையும் மகனும் தனிமைபடுத்தபட்டு பி.சி.ஆர் பரீசோதனை மேற்கொள்ளபட்ட தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த குடும்பத்தில் உள்ள தாய், தங்கை, சகோதரர்கள் ஆகிய நான்கு பேரையும் தனிமைபடுத்தபட்டு பி.சி.ஆர்.பரீசோதனை மேற்கொள்ளபட்ட போது பி.சி.ஆர் அறிக்கையின் ஊடாக இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்டது.

இதேவேளை மேலும் இனங்காணபட்ட நான்கு தொற்றாளர்களும் கொழும்பில் இருந்த வந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான இரண்டு பெண்களும் மாத்தறை, கம்புருபிட்டிய தனிமைபடுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதோடு மேலும் ஆறு ஆண்களும் ஹம்பாந்தோட்ட தனிமைபடுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.