பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய பேருந்து நடத்துனர் ஒருவருக்கு 30 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனையை அனுராதபுரம் மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.
குறித்த மாணவிக்கு 05 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் படியும் தவறினால் மேலும் 48 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஹொரவப்பொத்தானையிலிருந்து அநுராதபுரத்திற்கு சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தில், நடத்துனராக பணிபுரிந்த நபருக்கே குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
15 வயது பாடசாலை மாணவியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே குறித்த சந்தேக நபருக்கு 30 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனையை அனுராதபுரம் மேல் நீதிமன்றம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.