எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என்று பா.ஜ.க. தமிழகத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நவம்பர் 17 ஆம் திகதி முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும். வேல் யாத்திரை டிசம்பர் 6 ஆம் திகதி திருச்செந்தூரில் நிறைவடையும்.
பல தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் யாத்திரையில் கலந்து கொள்ள இருக்கின்றனர். எவ்வளவு தடங்கல் வந்தாலும் திட்டப்படி வேல் யாத்திரை தொடரும். தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
வேல் யாத்திரை மதம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல. கொரோனா முன்களப்பணியாளர்களை பாராட்ட, மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பேசவே வேல் யாத்திரை என குறிப்பிட்டார்.
கடந்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த இந்த வேல் யாத்திரைக்கு மாநில அரசு மற்றும், நீதிமன்றம் அனுமதி அளிக்காத நிலையில் அதனை ஆரம்பித்த எல்.முருகன் உள்ளிட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.