திருகோணமலை - மாவிலாறு வாய்க்காலில் குளிப்பதற்காக சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி நேற்று (5) உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதி அபிவிருத்தி நிர்மாணப் பணியில் ஈடுபட்டு வரும் ஐந்து பேர் வேலையை முடித்துவிட்டு மாவிலாறு வாய்க்காலில் குளிப்பதற்காக சென்ற போது நீரில் ஒருவர் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு உயிரிழந்தவர் பேராதனை - முர்தலாவ,பேரகொல்ல பகுதியைச் சேர்ந்த சமரக்கோன் முதியன்சலாகே சமிந்த பண்டார சமரக்கோன் (28வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன்போது உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், சட்ட வைத்தியரின் பிரேத பரிசோதனை முடிவடைந்த உடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.