விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடரான சிறகடிக்க ஆசை, அடுத்தடுத்த திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்நிலையில், நவம்பர் 25ஆம் திகதிக்கான எபிசோடில் மனோஜின் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்பதில் முத்துவும் ரவியும் வெற்றி பெற்றுள்ளனர்.
மனோஜின் கடையில் இருந்த பொருட்களைத் திருடிய நபர்களைக் கண்டுபிடித்த முத்து, அவர்களைப் பொலிஸாரிடம் ஒப்படைக்க உதவுகிறார். இதனால் இழந்த பொருட்கள் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் மனோஜ் நெகிழ்ச்சியடைகிறார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் தனது கடையைத் திறக்கும் மனோஜ், தனக்கு உதவி செய்த முத்து மற்றும் மீனாவுக்கு ஆடைகளைப் பரிசாக வழங்கி நன்றியைத் தெரிவிக்கிறார்.
முத்து – மீனாவின் உதவியால் மனோஜுக்கு ஏற்பட்ட இந்த மகிழ்ச்சியான தருணம் குடும்பத்தினருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
