வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாற்றம் செய்து, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில் அசுரர்களின் குருவாகவும், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பின் காரணியாகவும் கருதப்படுபவர் சுக்கிரன்.

மாளவ்ய ராஜயோகம் தரும் சுக்கிரன்: இந்த ராசிகளின் செல்வம் இரட்டிப்பாகப்போகுது! | Venus Transit In Libra Who Get Huge Luck

சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசி மாறுவதுடன், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாகவும் உள்ளார். இந்நிலையில், செப்டம்பர் 2ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார்.

இதனால் பஞ்சமகா புருஷ ராஜயோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களின் நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், தொழிலிலும் சிறப்பான வளர்ச்சியை அடையவுள்ளனர் என கணிக்கப்பட்டுள்ளது.

அப்படி செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

மாளவ்ய ராஜயோகம் தரும் சுக்கிரன்: இந்த ராசிகளின் செல்வம் இரட்டிப்பாகப்போகுது! | Venus Transit In Libra Who Get Huge Luck

சிம்ம ராசியின் 10 மற்றும் 3ஆம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் 3ஆம் வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

குறிப்பாக, சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். அவற்றைத் திறம்பட பயன்படுத்திக் கொண்டால், தொழிலில் நல்ல உச்சத்தைத் தொடலாம். குறிப்பாக, வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

பாபா வங்காவின் கணிப்பு: 2026 செப்டம்பரில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்!

பாபா வங்காவின் கணிப்பு: 2026 செப்டம்பரில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்!

மேஷம்

மாளவ்ய ராஜயோகம் தரும் சுக்கிரன்: இந்த ராசிகளின் செல்வம் இரட்டிப்பாகப்போகுது! | Venus Transit In Libra Who Get Huge Luck

மேஷ ராசியின் 7 மற்றும் 2ஆம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் 7ஆம் வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள்.நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும்.

பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

மாளவ்ய ராஜயோகம் தரும் சுக்கிரன்: இந்த ராசிகளின் செல்வம் இரட்டிப்பாகப்போகுது! | Venus Transit In Libra Who Get Huge Luck

விருச்சிக ராசியின் 12ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார்.இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது.

போட்டிகள் மற்றும் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும்.தொழில் ரீதியாக சிறப்பான காலமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

மிதுனம்

மாளவ்ய ராஜயோகம் தரும் சுக்கிரன்: இந்த ராசிகளின் செல்வம் இரட்டிப்பாகப்போகுது! | Venus Transit In Libra Who Get Huge Luck

மிதுன ராசியின் 5ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் பிணைப்பும் அதிகரிக்கும்.

எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.