காலையில் வழக்கமான தோசை சாப்பிட்டு சலித்துவிட்டீர்களா? வீட்டில் தோசை மாவு இல்லாத நேரத்திலும், அரிசி மாவு, ரவை மற்றும் தக்காளியை வைத்து சட்டென ஒரு சுவையான, மொறுமொறுப்பான தக்காளி தோசையைத் தயாரிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய இந்தத் தோசையை வெறும் 10 நிமிடத்தில் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
-
அரிசி மாவு – 1 கப்
-
ரவை – ½ கப்
-
பச்சை மிளகாய் – 3
-
இஞ்சி – சிறிய துண்டு
-
நன்கு கனிந்த தக்காளி – 4
-
சீரகம் – 1 டீஸ்பூன்
-
உப்பு – தேவையான அளவு
-
கொத்தமல்லி – சிறிதளவு
-
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
-
தண்ணீர் – தேவையான அளவு
-
எண்ணெய் – தோசை சுடுவதற்குத் தேவையான அளவு
செய்முறை
-
முதலில் மிக்ஸி ஜாரில் அரிசி மாவு, ரவை, பச்சை மிளகாய், இஞ்சி, நறுக்கிய தக்காளி, சீரகம் மற்றும் உப்பு சேர்க்கவும்.
-
தேவையான தண்ணீர் ஊற்றி அனைத்தையும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
-
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ரவா தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
-
மாவை மூடி வைத்து 10 நிமிடங்கள் ஊற விடவும்.
-
பின்னர் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
-
தோசைக்கல்லை நன்கு சூடாக்கி, மாவை மெல்லியதாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விடவும்.
-
குறைந்த தீயில் மொறுமொறுப்பாக வேக வைத்து, தேவையானால் மறுபுறமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
சுவையான, மொறுமொறுப்பான தக்காளி தோசை தயார்! இதனை தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும். தோசை மாவு இல்லாத காலைப் பொழுதுகளுக்கு இந்த உடனடி ரெசிபி சிறந்த தேர்வாகும்.
