பெரும்பாலான நபர்கள் தனக்கு மிகவும் வேண்டிய உறவினர்கள் இறந்துவிட்டால், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பத்திரமாக பாதுகாத்து வைப்பதுடன், அதனை தானும் பயன்படுத்தி வருவார்கள். 

ஆனால் அவ்வாறு இறந்தவர்களின் பொருட்கள், நகைகள், ஆடைகள் இவற்றினை நாம் பயன்படுத்தலாமா என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

அகால மரணம் அடைந்தவர்களின் ஜாதகத்தை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. ஓடும் நீரில் போட்டுவிட வேண்டும். 

இறந்தவரின் உள்ளாடைகள், இரத்தக் கரைகளுள்ள ஆடைகளையும், மற்ற ஆடைகளையும் வீட்டில் வைத்திருப்பது தவறு. அதை எரிந்து விடுவது நல்லது.

இறந்தவர்களின் ஆடைகளை நாம் பயன்படுத்துவது தீமையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

இறந்தவர்களின் நகை மற்றும் பொருட்களை வீட்டில் இருக்கலாமா? தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு | Can We Keep Dead People Things And Jewels

இறந்தவரின் ஒன்று, இரண்டு ஆடைகளை நன்கு துவைத்து, பீரோவில் பத்திரப்படுத்தி வைத்து, பின் அவர்களுக்கு பூஜை செய்யும் போது அதையும் வைத்து வணங்கினால், இறந்தவர் அங்கு வருவதாக நம்பிக்கை.

இறந்தவர்கள் அன்புக்குடையவராய் இருப்பதால் அவர்களின் பொருட்களை நாம் சேமித்து வைத்திருப்போம். ஆனால் இறந்தவர்களின் உடைகளை, பொருட்களை நாம் உபயோகிக்கக்கூடாது.

இறந்தவர்களின் நகைகளை மாற்றி வேறு நகையாக செய்து அணிந்து கொள்ளலாம்.

வயதானவர்கள் இறந்த பட்சத்தில் அவர்களின் நகை பரம்பரை நகையாக இருந்தால், அதை அப்படியே பயன்படுத்தலாம்.