side effects of poor sleeping : பொதுவாகவே இன்றைய அவசரமான வாழ்க்கை முறையில் வேலைப்பளு, மன அழுத்தம் மற்றும் கைபேசி பயன்பாடு போன்ற பலவேறு காரணங்களால் பலர் போதிய தூக்கத்தைப் பெறுவதில்லை. குறிப்பாக, இரவு நேரங்களில் நீண்ட நேரம் விழித்திருப்பது பலருக்கும் வழக்கமான ஒரு விடயமாகிவிட்டது என்றால் மிகையாகாது.

ஆனால், இவ்வாறு தொடர்ந்து தூக்கத்தைப் புறக்கணிப்பது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், சருமம் மற்றும் கூந்தலின் அழகையும் பாதிக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆயுர்வேத மற்றும் சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, உடலின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு முறையான தூக்கம் மிகவும் அவசியமாகும்.

ரிஷிகேஷைச் சேர்ந்த மருத்துவர் ராஜ்குமாரின் கூற்றுப்படி  ஆரோக்கியமான ஒருவர் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை நிம்மதியான தூக்கத்தைப் பெற வேண்டும். அந்தவகையில் தூக்கம் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தில் எவ்வாறு  தாக்கம் செலுத்துகின்றது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

தூக்கத்தைப் புறக்கணிப்பதால் சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன? நிபுணர்கள் எச்சரிக்கை! | Things You Shouldn T Do Before Bed For Skin Care

தூக்கத்தின்போது புதுப்பிக்கப்படும் சரும செல்கள்

நாம் தூங்கும் நேரத்தில் உடல் ஓய்வெடுப்பதுடன், சேதமடைந்த சரும செல்களைப் புதுப்பிக்கும் பணியும் நடைபெறுகிறது.

போதிய தூக்கம் கிடைக்காதபோது இந்த இயற்கையான செயல்பாடு பாதிக்கப்படுகிறது.இதன் காரணமாக சருமத்தின் ஈரப்பதம் குறைந்து, முகம் பொலிவிழந்து வறட்சியடையக்கூடும்.

அதேபோல், சருமத்தை உறுதியாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவும் கொலாஜன் உற்பத்தியிலும் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

தூக்கமின்மை காரணமாக கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படுவதால், இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுதல் மற்றும் சருமம் தளர்வடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

தூக்கத்தைப் புறக்கணிப்பதால் சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன? நிபுணர்கள் எச்சரிக்கை! | Things You Shouldn T Do Before Bed For Skin Care

 

கருவளையம் மற்றும் முகப்பொலிவு இழப்பு

போதிய தூக்கம் இல்லாதவர்களின் முகத்தில் சோர்வு தென்படுவதுடன், கண்களுக்குக் கீழே கருவளையங்கள் மற்றும் வீக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் முகத்தின் இயல்பான பொலிவு குறைந்து, வயதான தோற்றம் ஏற்படலாம்.

சருமத்தின் ஆரோக்கியத்தையும் அழகையும் பாதுகாக்க முறையான தூக்கத்தைப் பெறுவது அவசியம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தூக்கத்தைப் புறக்கணிப்பதால் சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன? நிபுணர்கள் எச்சரிக்கை! | Things You Shouldn T Do Before Bed For Skin Care

 

தூக்கமின்மையால் அதிகரிக்கும் முடி உதிர்வு

சருமத்தைப் போலவே கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் போதிய தூக்கம் அவசியமாகும். உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைக்காதபோது மன அழுத்தம் அதிகரித்து, கார்டிசோல் எனப்படும் மன அழுத்த ஹார்மோனின் அளவு உயரக்கூடும்.

இது முடியின் வளர்ச்சியைப் பாதித்து முடி உதிர்தலுக்கு வழிவகுக்கலாம். மேலும், தூக்கத்தின் போது உடலில் நடைபெறும் செல்கள் புதுப்பிக்கும் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதால், முடியின் வளர்ச்சியும் பாதிக்கப்படலாம்.நீண்டகால தூக்கமின்மை முடி உதிர்வு மற்றும் இளநரை போன்ற பிரச்சினைகளுக்கும் காரணமாக அமையக்கூடும்.

தூக்கத்தைப் புறக்கணிப்பதால் சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன? நிபுணர்கள் எச்சரிக்கை! | Things You Shouldn T Do Before Bed For Skin Care

நோய் எதிர்ப்புச் சக்தியிலும் பாதிப்பு

தொடர்ச்சியான தூக்கமின்மை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைப்பதுடன், ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கக்கூடும். இதன் காரணமாக முகப்பரு, ஒவ்வாமை மற்றும் சருமம் தொடர்பான ஏனைய பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.

நல்ல தூக்கத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்?

ஆரோக்கியமான சருமத்தையும் வலுவான கூந்தலையும் பராமரிக்க சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றலாம். அதன்படி, உறங்கச் செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பே கைபேசி மற்றும் மடிக்கணினி பயன்பாட்டைத் தவிர்ப்பது சிறந்த தூக்கத்ழத பெற துணைப்புரியும். இவற்றின் திரைகளிலிருந்து வெளிப்படும் நீல ஒளி தூக்கத்தைப் பாதிக்கக்கூடும்.

தினமும் ஒரே நேரத்தில் உறங்கச் செல்வதுடன், ஒரே நேரத்தில் விழித்தெழும் பழக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் உடலின் இயற்கையான உயிரியல் கடிகாரத்தைச் சீராக வைத்திருக்க முடியும்.

தூக்கத்தைப் புறக்கணிப்பதால் சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன? நிபுணர்கள் எச்சரிக்கை! | Things You Shouldn T Do Before Bed For Skin Care

 

மேலும், இரவு நேரங்களில் தேநீர், காபி போன்ற காஃபின் கலந்த பானங்களைத் தவிர்ப்பதுடன், கனமான உணவுகளை உட்கொள்வதையும் குறைத்துக்கொள்வது நல்லது.இவை தூக்கத்திற்கும் செரிமானத்திற்கும் இடையூறாக அமையலாம்.

மன அமைதியும் ஆழ்ந்த தூக்கமும் அவசியம்  என்பதால் உறங்குவதற்கு முன் புத்தகங்கள் வாசித்தல், இனிமையான இசையைக் கேட்டல் அல்லது தியானம் செய்தல் போன்ற பழக்கங்களும் மனதை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.

எனவே, சருமத்தின் பொலிவையும் கூந்தலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்களை மட்டுமே நம்பியிருக்காமல், தினசரி வாழ்க்கையில் போதிய நேரம் தூங்குவதற்கும் முக்கியத்துவம் கொடுப்பதும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. 

தினமும் 7 முதல் 8 மணி நேரம் தரமான தூக்கத்தைப் பெறுவது உடல் ஆரோக்கியத்திற்கும் இயற்கையான அழகைப் பேணுவதற்கும் பெரிதும் உதவும்.