பொதுவாகவே பெண்கள் மற்ற ஆடைகளை விடவும் புடவையில் சற்று கூடுதல் அழகுடன் இருப்பார்கள்.
அதன் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு சேலை அணிவது பிடிக்கும். இருப்பிணும் சேலை அணிவதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதனால் தினசரி பாவனைக்கு பலரும் சேலையை பயன்படுத்துவது தற்காலத்தில் குறைவு.
ஆனால் தொடர்ந்து புடவை அணிவது புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக சேலை கட்ட வேண்டும் என்றால் உள்பாவாடை கட்ட வேண்டியது அவசியம். அப்படி தொடர்ந்து நாடா கொண்டு இடுப்பில் இறுக்கமாக உள்பாவாடை கட்டிவதால் இடுப்பில் ஓர் உராய்வு ஏற்படுகின்றது.
அவ்வாறு தொடர்ந்து இடுப்பில் ஒரே இடத்தில் உராய்வு ஏற்படுவதால், அது நாளடைவில் காயத்தை ஏற்படுத்துகின்றது. இது தோல் அழற்சியாக மாறி பின்னர் புற்றுநோயாக உருவாகின்றது.
தினசரி ஒரே இடத்தில் இறுக்கமான முடிச்சு போட்டு உள்பாவடை கட்டுவதால், வியர்வை, அழுக்கு ஒரே இடத்தில் தேங்க ஆரம்பித்துவிடும். பின்னர் அந்த பகுதி மாத்திரம் நிறமாற்றம் அடைகின்றது இது தீவிர நிலையை அடையும் போது, வீரியம் மிக்க புண்ணாக மாறும்.
அது மட்டுமன்றி தொடர் உராய்வு காரணமாக ஸ்குவாமஸ் செல் (squamous cell) கார்சினோமாவின் (carcinoma) வளர்ச்சிக்கு இது காரணமாக அமைகின்றது.
இவ்வாறு தொடர்ந்து சேலை அணிந்தமையால், 60 மற்றும் 70 வயதான இரு பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் 70 வயது பெண் ஒருவருக்கு இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட புண் 18 மாதங்களுக்கு மேல் குணமடையவில்லை என்பதும் 60 வயது பெண் ஒருவருக்கு வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட புண் 2 ஆண்டுகளாக ஆறமல் துன்புறுத்தியுள்ளது.
குறித்த புற்றுநோய் அபாயம் சேலை கட்டுவோருக்கு மட்டுமன்றி சுடிதார் உள்ளிட்ட ஆடைகளுக்காக இறுக்கமாக பேண்ட் அணிபவர்களுக்கும்,இறுக்கமாக வேட்டி அணியும் ஆண்களுக்கும் கூட ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
பெண்கள் உள்பாவாடையை மிக இறுக்கமாக கட்டுவதை தவிர்த்துக்கொள்வதுடன், தினசரி இடுப்பில் ஒரோ பகுதியில் கட்டாமல் சற்று மேல் கீழாக கட்டலாம்.
அகலம் குறைந்த நாடாக்களை பயன்படுத்தாமல், அகலம் அதிகமான நாடாக்களை பயன்படுத்துவது அழுத்தத்தை குறைத்து உராய்வு ஏற்படுவதை தடுக்கும்.
இடுப்புப் பகுதியில் வேர்வை மற்றும் அழுக்கு சேராமல் தினசரி முறையான சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். இடுப்பு பகுதியில் மாற்றங்களை உணர்கின்றீர்கள் என்றால் அதனை அலட்சியப்படுத்தாது முறையாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.