கர்ப்ப காலத்திலும் அதற்குப் பிறகும் உடல் எடை அதிகரித்ததற்காக ஐஸ்வர்யா கடுமையான விமர்சனங்களையும் சோஷியல் மீடியா ட்ரோல்களுக்கும் ஐஸ்வர்யா ராய் பகிரங்கமாகவே பதிலடி கொடுத்திருந்தார்.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த உலக அழகி ஐஸ்வர்யா ராய், தனது உடல் குறித்தாக உருவ கேலிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நவம்பர் 1 அன்று தனது 53வது பிறந்தநாளைக் கொண்டாடினார். 2007-ம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ராய்க்கு 2011-ல் ஆராத்யா என்ற மகள் பிறந்தார். இருப்பினும், தாயான மகிழ்ச்சிக்கு மத்தியிலும், கர்ப்ப காலத்திலும் அதற்குப் பிறகும் உடல் எடை அதிகரித்ததற்காக ஐஸ்வர்யா கடுமையான விமர்சனங்களையும் சோஷியல் மீடியா ட்ரோல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. பின்னர் இது குறித்து அவர் பகிரங்கமாகவே பதிலடி கொடுத்திருந்தார்.
2015-ல் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் டேவிட் ஃப்ராஸ்டிக்கு அளித்த பேட்டியில், பிரசவத்திற்குப் பிந்தைய உடல் குறித்த விமர்சனங்களுக்கு எதிராக வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா, என் விஷயத்தில் நடந்தது எல்லாமே முற்றிலும் இயல்பானது. எடை உடல் அதிகரித்திருந்தாலும் சரி, உடலில் நீர் தேக்கம் ஏற்பட்டிருந்தாலும் சரி, அந்த கட்டத்தில் என் உடல் அடைந்த இயல்பான மாற்றம் தான் அது. நான் அதில் திருப்தியாக இருந்தேன், அதனால் தான் எப்போதுமே நானாகவே இருந்தேன்.
குழந்தைக்கு ஒதுக்கும் நேரத்தில் இருந்து எப்போது என்னால் வெளியே வர முடிந்ததோ, அப்போது நான் மக்கள் முன் வந்தேன். இது ஒரு பெரிய விஷயம் என்று எனக்குத் தோன்றியிருந்தால், நான் வெளியில் வராமல் ஒளிந்து கொண்டிருந்திருப்பேன் அல்லது அதை மாற்ற ஏதாவது செய்திருப்பேன். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை என்று கூறியிருந்தார்.
சமீபத்தில் நடிகை கத்ரீனா கைஃபும் இதே போன்ற பாடி ஷேமிங்கைச் சந்தித்தார். மும்பையில் நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, எடை கூடியதால் கத்ரீனாவின் திரைப்பயணம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற வகையில் சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவின. கத்ரீனா தனது மகன் விஹானைப் பெற்றெடுத்து ஒரு வருடம் கூட நிறைவடையவில்லை என்ற விஷயம் கூடத் தெரியாமல் தான் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன.
இது குறித்து 'வோக்' (Vogue) இதழின் அட்டைப்படத்துடன் அளித்துள்ள பேட்டியில், தனது உடல் எடையைக் கிண்டல் செய்தவர்களுக்கு கத்ரீனா வலுவான பதிலடியைக் கொடுத்துள்ளார். தனது உடல் எடையைக் குறித்துப் பேசியவர்களிடம் கம்பேக் எங்கே இருந்து கொடுக்க வேண்டும்? என் மனதில் இருந்த ஒரு பெரிய கனவை நோக்கிய அடியைத்தான் நான் எடுத்து வைத்துள்ளேன். அப்படியிருக்கும் போது நான் ஏன் பின்னோக்கிச் செல்ல வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.
பிரசவத்தைப் பற்றியும் மனம் திறந்த கத்ரீனா, "பிரசவத்திற்குப் பிந்தைய முதல் நாட்களில் விஹானின் முகத்தைப் பார்த்தபோது ஏற்பட்ட அனுபவம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. விக்கிக்கும் எனக்கும் அவ்வளவு சவால்கள் நிறைந்த 4 வருடப் பயணத்திற்குப் பிறகுதான் மகன் எங்கள் வாழ்க்கைக்குள் வந்தான் என்பதை நினைக்கும் போது அது ஒரு தனித்துவமான உணர்வாக இருந்தது. எனது ஃபிட்னஸ் பயணம் பற்றியும், எனது உடலுக்கு எப்போது அதிக ஆற்றல் உணர்வு கிடைக்கிறது என்பது பற்றியும் எனக்குத் தெளிவான புரிதல் உள்ளது. எனது சொந்த வேகத்தில் நான் இலக்கை அடைவேன்," என்று ட்ரோல் செய்பவர்களுக்குப் பதிலளித்து கத்ரீனா தனது பேச்சை முடித்தார்.
