கொரோனா தடுப்பூசியை பெறுவது தொடர்பாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மருந்து நிறுவனமான பைசர் நிறுவனம் தங்களது கொரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குறித்த தடுப்பு மருந்து 90 வீதம் பயனளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை பெற பைசர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என ஊடகவியலாளர்கள் சுகாதாரா அமைச்சக அதிகாரி ராஜேஷ் பூஷனிடம் கேள்வி எழுப்பினர். குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கொரோனா தடுப்பூசி நிர்வாகத்தில் உள்ள தேசிய வல்லுநர் குழுவினர் உள்நாடு மற்று வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்து தடுப்பூசி உற்பத்தியாளர்களுடனும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்
மேலும் இந்தியாவில் தற்போதைய கொரோனா நிலைவரம் குறித்த சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையையும் அவர் இதன்போது வெளியிட்டார். குறித்த அறிக்கையில் கொரோனா பரிசோதனையில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை 11.96 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.