இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85 இலட்சத்தைக் கடந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 46 ஆயிரத்து 318 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85 இலட்சத்து 7 ஆயிரத்து 754ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் கடந்த 24 மணித்தியாலங்களில் 559 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 121ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், ஒரு நாளில் 49 ஆயிரத்து 82 பேர் குணமாகி வீடு திரும்பியதால், குணமானோர் எண்ணிக்கை 78 இலட்சத்து 68 ஆயிரத்து 968ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நாட்டில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 5 இலட்சத்து 12 ஆயிரத்து 665ஆக சரிந்துள்ளது.
அவர்களில் 8 ஆயிரத்து 944 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.