பொதுவாகவே பெற்றோர்கள் என்றால் குழந்கைள் மீது அதிக அக்கறையும் பாசமும் வைத்திருக்கும் அதே சமயம் தங்களின் குழந்தைகள் நல்ல ஒழுக்கம் உடையவர்களாக வளர வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
சில பெற்றோர்கள் குழந்தைகளுடன் நண்பர்களை போல் பழகுவார்கள்.இதனால் குழந்தைகளும் இவர்களிடம் எந்த விடயத்தையும் மறைக்காமல் பகிர்ந்துக்கொள்வார்கள்.
ஆனால் சில பெற்றோர்களை நினைத்தாலே குழந்தைகளுக்கு பயம் வந்துவிடும். அந்தளவுக்கு குழந்தைகளை கடுமையாக நடத்துபவர்களாக இருப்பார்கள்.
இதற்கும் இவர்களின் ராசிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட சில ராசியை சேர்ந்த பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்களாக இருப்பார்களாம். இப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே தலைமைத்துவ குணம் அதிகமாக இருக்கும். இதனால் அவர்கள் குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துக்கொள்வார்கள்.
அவர்களின் கண்டிப்பான நடத்தை கடுமை என்று தவறாகக் கருதப்பட்டாலும், அது உண்மையில் குழந்தைகளை சிறந்த முறையில் வளர்க்க வேண்டும் எப்பதே அதன் உண்மையான நோக்கமாக இருக்கின்றது.
கன்னி
கன்னி ராசியினர் எப்போதும் எல்லா விடயங்களிலும் வெற்றியடைய வேண்டும் என அதிகம் விரும்புவார்கள் .
அதனால் தங்கள் பிள்ளைகள் வலுவான மதிப்புகள் மற்றும் உறுதியான பணி நெறிமுறைகளுடன் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் கண்டிப்பாக நடந்துக்கொள்கின்றனர்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் உறவுகளின் மீது அதிக பாசம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இவர்களுக்குள் இருக்கும்.
அவர்களின் விதி முறைகள் சற்று கடுமையானதாகத் தோன்றினாலும், அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவ்வாறு நடந்துக்கொள்கின்றனர்.