நடிகை அர்ச்சனா

சுருட்டை முடி, கன்னக்குளி அழகு என்ற தோற்றத்துடன் தமிழ் சின்னத்திரையில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அர்ச்சனா குமார்.

தனது மீடியா பயணத்தை டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பிறகு விஜய் டிவி பக்கம் வந்தவர் பொன்மகள் வந்தால் சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக காலடி எடுத்து வைத்தார்.

அதன்பின் ஈரமான ரோஜாவே வீரியலில் நடித்தவர் கூடவே மாடலிங், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என பிஸியாக இருந்து வந்தார். சின்னத்திரையை தாண்டி Maargan, Paris Cafe, Dude போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

பிரபல சீரியல் நடிகை அர்ச்சனாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது... போட்டோஸ் இதோ | Popular Tamil Serial Actress Archana Gets Engaged

நிச்சயதார்த்தம்

இன்ஸ்டாவில் தொடர்ந்து போட்டோ ஷுட் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோ என வெளியிட்டு வந்த நடிகை அர்ச்சனா இப்போது ஒரு சூப்பர் குட் நியூஸ் அறிவித்துள்ளார்.

அதாவது அவர் தனது காதலர் அருண்குமாரை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் இந்த புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.