பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில், சௌசௌ காயிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.

குறிப்பாக, கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்தும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சௌசௌ ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும்.

தொப்பையை கரைக்கும் சௌசௌ காய் குழம்பு... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Chow Chow Poricha Kulambu Recipe Health Benefits

மேலும், இதில் உள்ள ஃபோலேட் (வைட்டமின் B9) உள்ளிட்ட சத்துக்கள் புதிய ரத்த அணுக்கள் உருவாகவும் உதவுகின்றன.

இத்தனை நன்மைகள் நிறைந்த சௌசௌ காயை வைத்து, சுவையான பொரிச்ச குழம்பை எளிமையாக எப்படிச் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்

சௌசௌ - 2 

எண்ணெய் - 1 தே.கரண்டி 

கடுகு - 1/2 ஸ்பூன் தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி

சீரகம் - 1/4 தே.கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு 

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு 

கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

தொப்பையை கரைக்கும் சௌசௌ காய் குழம்பு... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Chow Chow Poricha Kulambu Recipe Health Benefits

வறுத்து அரைக்க தேவையானவை 

 தனியா - 2 தே.கரண்டி

சீரகம் - 1/2தே.கரண்டி

மிளகு - 1/2 தே.கரண்டி

பட்டை - 1 இன்ச்

கிராம்பு - 2

வர மிளகாய் - 2 

துருவிய தேங்காய் - 2 தே.கரண்டி

தக்காளி - 1

தொப்பையை கரைக்கும் சௌசௌ காய் குழம்பு... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Chow Chow Poricha Kulambu Recipe Health Benefits

செய்முறை

முதலில் சௌ சௌவை நன்றாகக் கழுவி, தோலை நீக்கி, சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயைச் சூடாக்கி, கொத்தமல்லி விதை, வரமிளகாய், சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அவை ஆறியதும் மிக்சியில் போட்டு, துருவிய தேங்காயையும் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து, அனைத்தையும் நன்றாக அரைத்து விழுதாகத் தயாரித்து வைத்துக்கொள்ளவும்.

தொப்பையை கரைக்கும் சௌசௌ காய் குழம்பு... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Chow Chow Poricha Kulambu Recipe Health Benefits

அடுத்து, குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும், சௌ சௌ துண்டுகள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

தொப்பையை கரைக்கும் சௌசௌ காய் குழம்பு... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Chow Chow Poricha Kulambu Recipe Health Benefits

பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். இப்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலந்து, உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும்.

குக்கரை மூடி, மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் குக்கரைத் திறக்கவும். அவ்வளவுதான்! சுவையான சௌ சௌ பொரிச்ச குழம்பு தயார்.