சட்னியில் பல வகைகள் உள்ளன. காலை உணவிற்கு எப்போதும் சட்னி செய்வது ஒரு வழக்கமாகி விட்டது. இட்லி தோசை என எது செய்தாலும் அதற்கு ஒரு சட்னி மிகவும் முக்கியமாக உள்ளது.

அந்த வகையில் எல்லா சட்னிகளையும் விட பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். இது செய்வதற்கும் சுலபம். 

ஆனால் தற்போது பதிவில் பூண்டு சட்னியை எப்படி சுவையாக செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம். 

பூண்டு சட்னி சுவையா இருக்கணுமா? இதை சேர்த்து பாருங்க | How To Make Garlic Chatney In Home Recipe

தேவையான பொருட்கள்

  • காய்ந்த சிவப்பு மிளகாய் – 10-12 (உங்கள் சுவைக்கு ஏற்ப)
  • பூண்டு – 10-12 பற்கள் சீரகம் – 1 தேக்கரண்டி
  • உப்பு – சுவைக்கு ஏற்ப
  • கடுகு எண்ணெய் – 2-3 மேசைக்கரண்டி
  • தண்ணீர் – தேவைக்கு ஏற்ப 

பூண்டு சட்னி சுவையா இருக்கணுமா? இதை சேர்த்து பாருங்க | How To Make Garlic Chatney In Home Recipe

செய்முறை

முதலில் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும்.

பின்னர் அதே வாணலியில் தோல் உரித்த பூண்டு பற்களை சேர்த்து லேசாக பொன்னிறமாக வதக்கவும். இதை ஆற விடவும்.

பூண்டு சட்னி சுவையா இருக்கணுமா? இதை சேர்த்து பாருங்க | How To Make Garlic Chatney In Home Recipe

அதன் பிறகு மிக்ஸியில் வறுத்த மிளகாய், பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையான விழுதாக அரைக்கவும்.

பின் ஒரு சிறிய வாணலியில் கடுகு எண்ணெய் சூடாக்கி, அதில் அரைத்த விழுதை சேர்த்து 2–3 நிமிடம் மிதமான தீயில் கிளறி வதக்கவும். இறுதியில் அடுப்பை அணைத்து பரிமாறவும். இதை இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்து சுவைக்கலாம்.