எல்லோருடைய வீடுகளிலும் ரோஜா செடி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதாவது, ரோஜாவில் இருக்கக்கூடிய நறுமணமும் அழகிலும் மயங்காதவர்கள் நிச்சயம் யாரும் இருக்க முடியாது. ஆனால், ஒரு சிலர் அவர்களுடைய தோட்டத்தில் செய்யக்கூடிய சிறிய தவறினால் அவர்களுடைய ரோஜா செடி பெரிய அளவில் வளர்வதில்லை.

அதனால், பூக்கள் பூக்காத நிலை மற்றும் செடியின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது போன்றவை ஏற்படுகிறது. இவ்வாறான தோட்ட பிரச்சனைகளுக்கு இயற்கை மற்றும் எளிய தீர்வு தான் எப்சம் உப்பு.

ரோஜா செடிகளுக்கு எப்சம் உப்பு ஏன் அவசியம்:

மெக்னீசியம் சல்பேட் என்று அழைக்கக்கூடிய எப்சம் உப்பில் மெக்னீசியம் மற்றும் சல்பர் ஆகிய இரண்டு முக்கியமான சத்துக்கள் நிறைந்திருக்கிறது. அதனால் தாவரங்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான இலைகளுக்கும் பெரிதாக உதவுகிறது.

ரோஜா செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க எப்சம் உப்பு பயன்படுத்தலாமா? | Can We Use Epsom Salt For Rose Flower Planting

நம்முடைய இலைகளில் குளோரோஃபில் உற்பத்தியை அதிகரித்து அவை இலைகளை அடர் பச்சையாக மாற்ற உதவுகிறது.

அதோடு செடிகள் மண்ணிலிருந்து பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் போன்ற பிற சத்துக்களை எளிதில் உறிஞ்சவும் உதவுகிறது. செடியின் அடிப்பகுதியில் இருந்து புதிய தண்டுகள் வளரவும் மற்றும் துளர்கள் வளர தூண்டுகிறது.மேலும், இந்த எப்சம் உப்பை செடியில் இரண்டு வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.

முதல் முறை:

எப்சம் உப்பை செடியின் அடிப்பகுதியை சுற்றிலும் சமமாக தூவிக் கொள்ள வேண்டும். ஆனால், தண்டில் நேரடியாக படுவதை தவிர்க்க வேண்டும். தண்டிலிருந்து சில அங்குலங்கள் தள்ளி பரப்ப வேண்டும். அதேபோல், ஒரு சிறிய மண்வெட்டி அல்லது தோட்ட கருவியை பயன்படுத்தி எப்சம் உப்பு மேலிருக்கும்மண்ணுடன் லேசாக கலக்குமாறு கிளறி விட வேண்டும்.

பிறகு உப்பு மண்ணில் நன்றாக கரைந்து வேர்களுக்கு செல்வதற்காக, பயன்பாட்டிற்கு பிறகு செடிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். செடிகள் வளரும் பருவத்தில் இருக்கும் பொழுது மாதத்தில் ஒரு முறை இதை செய்யலாம்.

ரோஜா செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க எப்சம் உப்பு பயன்படுத்தலாமா? | Can We Use Epsom Salt For Rose Flower Planting

இரண்டாம் முறை:

ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் உப்பு நன்றாக கரைத்துக் கொண்டு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அதை ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு வெயில் இல்லாத காலை நேரத்தில் அல்லது மாலையில் கிளைகளின் மீது நன்கு படுமாறு அதனை தெளிக்க வேண்டும். இதை மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஒருமுறை செய்யலாம்.

கவனிக்க வேண்டியவை:

கடும் வெயில் காலம் அல்லது வறட்சியான கால நிலையின் பொழுது எப்சம் உப்பு பயன்படுத்துவதை நாம் தவிர்ப்பது நல்லது. காரணம், அதிகப்படியான வெப்பமும் வளர்ச்சியும் இது கூடுதல் அழுத்தத்தை கொடுக்கக்கூடும். அதே சமயம், இந்த எப்சம் உப்பை அளவிற்க்கு அதிகமாக பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். அது மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களின் சமநிலையில் பாதிக்க செய்யும்.

உங்களுடைய தோட்டத்து மண்ணில் ஏற்கனவே தேவையான அளவு மெக்னீசியம் இருந்தால் எப்சம் உப்பு உங்களுக்கு தேவைப்படாது. அதனால், மண்ணை பரிசோதித்து கொள்வது அவசியம். குறிப்பாக ரோஜா செடிகளுக்கு தினமும் குறைந்தது ஆறு மணி முதல் நேரடி சூரிய ஒளி கிடைக்க செய்யுங்கள்.

ரோஜா செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க எப்சம் உப்பு பயன்படுத்தலாமா? | Can We Use Epsom Salt For Rose Flower Planting

பூக்கள் பூத்து முடித்தவுடன் செடியின் காய்ந்த கிளைகளை கத்தரித்து விடுவது புதிய துளிர்களை வர வழிவகுக்கும். ​2017ல் Frontiers in Plant Science இதழில் வெளியான ஒரு ஆய்வின்படி, ரோஜா செடிகள் உள்ள மெக்னீசியம் சல்பேட் கரைசலை இலைகளில் தெளிக்கும்பொழுது பூக்களின் உற்பத்தி 26 சதவீதம் முதல் 38 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது.

அதாவது மெக்னீசியம் சத்து தாவரங்களில் ஒட்டுமொத்த செயல் திறனை மேம்படுத்தி நமக்கு அதிகம் பூக்கள் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.