இருவர் வீட்டில் 10 எதிர்ப்பு பதாகைகள், 6 கருப்பு பலூன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.
கருப்புக் கொடி காட்ட திட்டம்
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி, அவருக்கு கருப்புக் கொடி காட்டவும், எதிர்ப்பு பதாகைகள் காட்டவும், கருப்பு பலூன்களை பறக்க விடவும் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முகமது நவ்ஷத் அலி ஆகியோர் திட்டமிட்டு இருந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சென்னை வானகரத்தில் உள்ள ரஞ்சன் குமார் வீட்டுக்கு விரைந்து சென்றனர். அவரை வீட்டுக் காவலில் வைத்தனர்.
இதேபோல் முகமது நவ்ஷத் அலி வீட்டுக்கும் போலீசார் சென்று அவரையும் வீட்டுக்காவலில் வைத்தனர். அவர்களிடம் இருந்து 10 எதிர்ப்பு பதாகைகள், 6 கருப்பு பலூன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
