விராட் - அனுஷ்கா

இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் ஒரு அடுக்குமாடி கட்டிடம் ஒன்றினை சமீபத்தில் வாங்கியுள்ளனர். மும்பை அந்தேரி மேற்கிலுள்ள வெர்சோவா பகுதியில் விலையுயர்ந்த பிளாட் ஒன்றினை வாங்கியுள்ளனர்.

ரூ.1300 சொத்து மதிப்பு!! விராட் - அனுஷ்கா வாங்கிய புது அடுக்குமாடி வீடு.. | Virat Kohli Anushka Sharma Bought New Apartment

பத்திரப்பதிவு ஆவணங்களின் அடிப்படையில் விராட் - அனுஷ்கா ஜோடி இணைந்து கோத்ரேஜ் ஸ்கைஷோர் கட்டிடத்தின் மேல் தளத்தில் 2,644 சதுர அடி பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றினை வாங்கியுள்ளனர். இதில் 316 சதுர அடி அளவிலான பிரத்யேக பகுதியும் 3 கார்கள் நிறுத்துமிடங்களும் அடங்கும். இந்த சொத்தின் மதிப்பு சுமார் ரூ. 18.29 கோடியாகும். இது விராட் கோலியின் 2026 ஐபிஎல் சம்பளத்திற்கு கிட்டத்தட்ட சமமாம்.

பெங்களூரு அணிக்காக கடந்த சீசனில் ரூ. 21 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பின் விற்பனை பரிவர்த்தனை ஜூலை 21 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்த தம்பதியினர் ரூ. 1.09 கோடியை முத்திரை கட்டணமாகவும் கூடுதலாக ரூ. 30 ஆயிரம் பதிவு கட்டணமாகவும் செலுத்தியுள்ளனர்.

ரூ.1300 சொத்து மதிப்பு!! விராட் - அனுஷ்கா வாங்கிய புது அடுக்குமாடி வீடு.. | Virat Kohli Anushka Sharma Bought New Apartment

சொத்து மதிப்பு

விராட் கோலி ஏற்கனவே மும்பை வொர்லி பகுதியில் 7,171 சதுர அடி பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்பு, குருகிராமில் ஒரு பங்களா, அலிபாக்கில் ஒரு பண்ணைவீடு என்று சொந்தமாக வைத்துள்ளார்.

விராட் கோலியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1,050 கோடி முதல் ரூ. 1115 கோடி வரை இருக்கும் என்றும் பிராண்ட் வேல்யூவாக ரூ. 3542 கோடியையும் வைத்திருக்கிறாராம்.

மேலும் விராட் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவின் சொத்து மதிப்பு ரூ. 255 கோடி முதல் ரூ. 300 கோடி வரை இருக்கும் என்று இருவரையும் சேர்த்து சுமார் ரூ. 1300 கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.