உடல் எடையை கடகடவென குறைக்கும் கஞ்சியை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலை உணவு என்பது மிகவும் முக்கியமாகும். காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவினால் தான் அன்றைய சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.
ஆதலால் சத்தான உணவை காலையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இன்னும் உணவில் அதிக கவனம் எடுக்க வேண்டும்.
சிறுதானியங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தினை தருவதுடன் இதனுடன் முருங்கை கீரை சேர்த்து கஞ்சியாக எடுத்துக்கொள்ளலாம். இந்த கஞ்சியை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
அரைத்து பொடி செய்வதற்கு
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கஞ்சி செய்வதற்கு
குதிரைவாலி - 1/4 கப்
சாமை - 1/4 கப்
திணை - 1/4 கப்
வரகரிசி - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
தண்ணீர் - 4 கப்
சின்ன வெங்காயம் - 15 (தட்டியது)
பூண்டு - 12 பல் (தட்டியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
சுடுநீர் - 3 கப்
முருங்கைக்கீரை - 2 கைப்பிடி

செய்முறை
மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், வரமிளகாய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கர் ஒன்றில் குதிரைவாலி, சாமை, திணை, வரகரிசி இவற்றினை எடுத்து 4 முறை கழுவிகொண்டு 15 நிமிடம் தண்ணீர் ஊற வைக்கவும்.
இதனுடன் தட்டி வைத்துள்ள சின்னவெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மசாலா பொடி, உப்பு சேர்த்து கலந்து குக்கரில் 4 விசில் விட்டு இறக்கவும்.

விசில் சென்றதும் குக்கரை திறந்து அதில் 3 கப் சுடுதண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி கொதிக்கவிடவும். பின்பு முருங்கை கீரையை சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால் சிறுதானிய முருங்கைக்கீரை கஞ்சி தயார்.
