இன்று (09) நள்ளிரவு 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

ஒழுக்காற்று குற்றச்சாட்டை எதிர்நோக்கும் நபருக்கு வர்த்தக பிரதி பொது முகாமையாளர் நியமனம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்ததாக நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று நள்ளிரவு 12 மணி முதல் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள நிலைய அதிபர்கள், குறித்த தீர்மானத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.